நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார்.
நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் நவ.7, 1954
பதிவு: நவம்பர் 07, 2020 03:28
கமலஹாசன்
நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். இவர் 1960-ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் இன்றளவும் விளங்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல இந்திய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-
* 1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.
* 1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.
* 1893 - கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
* 1931 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
* 1941 - நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.
* 1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.
* 2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.