துனிசியா 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும். துனிசியா 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. * 1616 - சேர் வால்ட்டர் ரலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் லண்டனில் விடுவிக்கப்பட்டார். * 1739 - நாதிர் ஷா டெல்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான். * 1760 - பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ, நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது. * 1815 - எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 ராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான். * 1861 - மேற்கு ஆர்ஜென்டினாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
* 1916 - அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார். * 1934 - ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்தது. இதில் சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர். * 1942 - போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1942 - மேற்கு உக்ரைனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜெர்மனியரினார் கொல்லப்பட்டனர்.
* 1948 - சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது. * 1956 - பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது. * 1974 - லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. * 1995 - டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர். * 2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.