ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 என்ற விண்கலம் முதன் முலாக செவ்வாய் கோளை சுற்றி வந்தது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1985 - கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் பலியானார்கள். * 1989 - இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர ராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டார். * 1990 - உலக வலைப்பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது. * 1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
* 1993 - தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை ராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப்புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர். * 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர். * 1995 - சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.