தொழில்நுட்பம்
நோக்கியா ஸ்மார்ட்போன்

அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2021-01-23 05:59 GMT   |   Update On 2021-01-23 05:59 GMT
அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


ஹெச்எம்டி குளோபல் உருவாக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் குவிக்சில்வர் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. புது நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது. 

இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இது நோக்கியா 6.3 அல்லது 6.4 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தற்போதைய ரென்டர்களின் படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா செட்டப், 6.45 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.



இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 690ஜி பிராசஸர், அட்ரினோ 619 GPU கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 6.4 5ஜி என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

புகைப்படங்களை எடுக்க புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News