தொடர்புக்கு: 8754422764

இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் - ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்


ஐபோன் 11:

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் மற்றொன்று அல்ட்ரா வைடு சென்சார் ஆகும். இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐபோன்களில் முதல் முறையாக செல்ஃபி கேமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் அதிக சக்திவாய்ந்ததாகும். புதிய ஐபோன் 11 மாடலில் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களை விட அதிக திறன் கொண்ட கிராஃபிக்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் முந்தைய ஐபோன் XR மாடலை விட ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் 11 விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஐபோன் 11 ப்ரோ:

ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் மாடலாக ஐபோன் 11 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று பிரைமரி கேமரா செனசார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மாடலில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. வைடு கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டீப் ஃபியூஷன் எனும் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மென்பொருள் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இது புகைப்படங்களை அழகாக்க ஒன்பது படங்களை ஒன்றிணைத்து சிறந்த புகைப்படத்தை அதிவேகமாக வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐபோன் 11 ப்ரோ மாடல் விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.
Related Tags :
More