தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

பிராட்பேண்ட் சலுகைகளுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

Published On 2019-07-13 04:45 GMT   |   Update On 2019-07-13 04:45 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.



பி.எஸ்.என்.எல். நிறுவன பிராட்பேண்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விலை குறைந்த சலுகைகளிலும் பயனர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ. 499-க்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சலுகைகளுக்கும் அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 745 விலைக்கு அதிகமான சலுகைகளை தேர்வு செய்வோருக்கு மட்டுமே அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடத்திற்கு ரூ. 999 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



அமேசான் பிரைம் சந்தாவுடன் வருடாந்திர சலுகைகளில் கேஷ்பேக் பலன்களும் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவையை ஏற்கனவே பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும், புதிய வாடிக்கையாளர்களும் அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக பெற முடியும்.

பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். தற்சமயம் 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. கேஷ்பேக் பலன்கள் டி.எஸ்.எல்., பாரத் ஃபைபர் மற்றும் போபோ வைஃபை போன்ற சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது. புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் மற்றும் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

எனினும், ரூ. 499 விலைக்கு குறைவான சலுகைகளுக்கு 15 சதிவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ. 499 விலையில் துவங்கி ரூ. 900 விரையிலான சலுகைகளுக்கு 20 சகவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ. 900 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுக்கு 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News