தொழில்நுட்பம்
ஏர்டெல் லோகோ

ரூ.148 விலையில் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்

Published On 2019-07-08 05:05 GMT   |   Update On 2019-07-08 05:05 GMT
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 148 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஏற்கனவே ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.

இச்சலுகையில் பயனர்களுக்கு ரூ. 145 டாக்டைம், 1 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் எஸ்.டி.வி. காம்போ பிரிவில் கிடைக்கும் ரூ. 148 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டி.வி. ஆப் மற்றும் விண்க் மியூசிக் சேவையை இயக்குவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடாகா போன்ற வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த சலுகை மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.



ரூ. 148 ஏர்டெல் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 28 நாட்களுக்கு மொத்தம் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், உள்ளூர், வெளியூர் அழைப்புகளுடன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டி.வி. செயலி மூலம் 350-க்கும் அதிக நேரலை சேனல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 1699 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்து தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்தது. ஏற்கனவே இச்சலுகையில் 1 ஜி.பி. டேட்டா மட்டும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகையிலும்  ஏர்டெல் டி.வி. செயலி மூலம் 350-க்கும் அதிக நேரலை சேனல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதி மற்றும் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News