தொழில்நுட்பம்
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் டீசர்

நான்கு கேமராக்களுடன் விரைவில் இந்தியா வரும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்

Published On 2019-07-06 04:15 GMT   |   Update On 2019-07-06 04:15 GMT
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா வழங்கப்பட இருக்கிறது.



இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹாட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த மாதம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 என அழைக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை இதுவரை இல்லாத வகையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் தள விவரங்களில் புதிய ஸ்மார்ட்போனில் மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 



இத்துடன் ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

முன்னதாக வெளியான இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.19 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் சென்சார் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News