தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 7 ப்ரோ

இன்று விற்பனைக்கு வரும் புதிய ரெட்மி நோட் 7 ப்ரோ வேரியண்ட்

Published On 2019-07-03 05:21 GMT   |   Update On 2019-07-03 05:21 GMT
சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் இன்று விற்பனைக்கு வருகிறது.



சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ரெட்மி நோட் 7 ப்ரோ இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 13,999 மற்றும் ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ வெளியாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சியோமி தற்சமயம் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.



இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ புதிய வேரியண்ட் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 ப்ரோ புதிய 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் முதல் விற்பனை இன்று (ஜூலை 3) மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்ப்டடுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, MIUI 10 யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது.

புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை மற்றும் ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சம் மற்றும் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News