தொழில்நுட்பம்
ஹூவாய் வை9 2019

இந்தியாவில் ஹூவாய் ஸ்மார்ட்போனின் விலை அதிரடி குறைப்பு

Published On 2019-06-30 04:50 GMT   |   Update On 2019-06-30 04:50 GMT
ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.



ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் வெளியாகி ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே ஹூவாய் தனது வை9 2019 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ. 3000 குறைப்பதாக அறிவித்துள்ளது. ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போன் ரூ. 3000 குறைக்கப்பட்ட நிலையில் தற்சமயம் ரூ. 12,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

ஹூவாய் வை9 2019 புதிய விலை அமேசான் வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. இந்த விலை குறைப்பு எத்தனை நாட்கள் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 13 எம்.பி. + 2 எம்.பி. செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களுடன் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



ஹூவாய் வை9 2019 சிறப்பம்சங்கள்

- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா
- 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News