தொழில்நுட்பம்

இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

Published On 2019-06-18 09:23 GMT   |   Update On 2019-06-18 09:23 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது.



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இரண்டு ஸ்மாரட்போன்களும் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் ரூ.500 குறைப்பதாக நோக்கியா அறிவித்துள்ளது. விலை குறைப்பு குறைந்த காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம் மாடல் தற்சமயம் ரூ.8,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 3 ஜி.பி. ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.10,290 என மாறி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் முன்னதாக முறையே ரூ.8,990 மற்றும் ரூ.10,790 விலையில் விற்பனை செய்யப்பட்டன.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் a-Si TFT எல்.சி.டி. ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் நோட்டிஃபிகேஷன் லைட் கீ மற்றும் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி எனும் ஒரே வேரியண்ட்டில் தான் கிடைக்கிறது. இதன் விலையும் இந்தியாவில் ரூ.500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கிளாஸ் பேக் கொண்டிருக்கும் நோக்கியா 4.2 மாடலில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், பவர் பட்டனில் நோட்டிஃபிகேஷன் லைட், பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையும் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News