தொழில்நுட்பம்

140 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை

Published On 2018-09-02 06:33 GMT   |   Update On 2018-09-02 06:33 GMT
ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை பயனர்களுக்கு 140 ஜிபி டேட்டா வழங்குகிறது. #Airtel #offers



இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள ஏர்டெல் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அதிவேக 4ஜி டேட்டா வேகம் வழங்கி வருவதாக கூறி வரும் ஏர்டெல், இம்முறை புதிதாக ரூ.449 விலையில் பிரீபெயிட் பயனர்களுக்கான சலுகையை அறிவித்துள்ளது.

70 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 140 ஜிபி டேட்டா வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.449 விலையில் வழங்கும் சலுகையில் 91 நாட்கள் வேலிடிட்டி ஆனால் 136 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.448 சலுகைக்கும் போட்டியாக அமைந்துள்ளது. ஜியோவின் ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டு சலுகைகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



சமீபத்தில் ஏர்டெல் அறிவித்த சர்வதேச ரோமிங் சலுகைகளை ரூ.196 விலையில் அறிவித்தது. இதில் பிரீபெயிட் பயனர்கள் அமெரிக்கா, ப்ரிட்டன் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இலவச ரோமிங் வழங்குகிறது. இவற்றில் லிமிட்டெட் உள்ளூர் அழைப்புகள், இன்கமிங் அழைப்புகள் மற்றும் இந்தியாவுக்கு வாய்ஸ் கால் சேவையை வழங்குகிறது. 

வெளிநாடுகளுக்கு செல்லும் பயனர்கள் ரூ.196 விலையில் துவங்கும் சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். ரூ.196 சலுகையில் 20 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் சேவை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரூ.296 சலுகையில் 40 நிமிடங்களும், ரூ.446 சலுகையில் 75 நிமிடங்களும் பேச முடியும். இவை முறையே 30 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. 

ஏர்டெல் அறிவித்து இருக்கும் சர்வதேச ரோமிங் சலுகை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாள், வங்கதேசம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பக்ரைன், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாங் காங், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயனர்களுக்கு வங்கப்படுகிறது.
Tags:    

Similar News