தொழில்நுட்பம்
கோப்பு படம்

இந்தியாவில் இந்த ஐபோன் வெளியாகாதாம்

Published On 2018-08-05 08:03 GMT   |   Update On 2018-08-05 08:03 GMT
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவிருக்கும் ஐபோன்களில் ஒரு மாடல் இந்தியாவில் வெளியாகாது என கூறப்படுகிறது. #Apple #iPhone


ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிடும் ஐபோன்களில் ஒரு மாடலில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் ஸ்டான்ட்பை வசதியுடன் வரும் ஐபோன் மூலம் பயனர்கள் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும்.

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் டூயல் சிம் ஐபோன் மாடலை சீனாவில் மட்டும் தான் வெளியிடும் என கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் தகவல்களின் படி, டூயல் சிம் ஸ்லாட் கொண்ட விலை குறைந்த 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் சீனாவில் மட்டும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

செப்டம்பர் வெளியீட்டுக்கான புதிய ஐபோன்கள் ஃபாக்ஸ்கானில் நடைபெறுவதாகவும், இந்த ஆண்டு நான்கு பிரத்யேக மாடல் நம்பர்களில் (801, 802, 803, மற்றும் 804) உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் 801 மற்றும் 802 மாடல்களில் முறையே 5.8 மற்றும் 6.5 இன்ச் ஐபோன்கள் என்றும் மற்ற இரண்டு மாடல்கள் 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன்கள் என்றும்; ஒன்றில் ஒற்றை சிம் வசதியும், மற்றொரு மாடலில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.



சீனாவில் டூயல் சிம் ஸ்லாட் பயன்பாடு அதிகமாக இருப்பதாலும், சீன போட்டியை எதிர்கொள்ளும் விதமாகவும் புதிய ஐபோன் வெளியீடு அமைந்துள்ளது. ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்சு 6.1 இன்ச் ஐபோன் மாடல்களை இந்த ஆண்டு வெளியிடும் என தெரிவித்திருந்தார்.

இவற்றில் டூயல் சிம் வேரியன்ட் வழக்கமான ஒற்றை சிம் வேரியன்ட்-ஐ விட விலை அதிகமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார், எனினும் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் வெளியிடப்படும் என்பது குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

கியோ வெளியிட்ட தகவல்களின் படி டூயல் சிம் ஸ்லாட் கொண்ட 6.1 இன்ச் ஐபோனின் விலை 650 டாலர்களில் இருந்து 750 டலார்கள் என்றும், வழக்கமான ஒற்றை சிம் வெர்ஷன் விலை 550 டாலர்களில் இருந்து 550 டலார்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Apple #iPhone
Tags:    

Similar News