தொழில்நுட்பம்

இந்த அம்சத்திற்காக ஐபோன் விற்பனை ஒருமாதம் தள்ளிப்போகிறது

Published On 2018-07-26 04:34 GMT   |   Update On 2018-07-26 04:34 GMT
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருக்கும் 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் மாடல் எதிர்பார்ப்பதை விட தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Apple #iPhone



ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோனினை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இதன் விற்பனை அக்டோபர் மாதத்தில் துவங்கலாம் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மோர்கன் ஸ்டேன்லி தெரிவித்திருக்கிறார்.

வித்தியாசமான பேக்லைட் சிஸ்டம் பொருத்துவது சார்ந்த உற்பத்தி கோளாறு காரணமாக விற்பனை தாமதமாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார். புதிய பேக்லைட் சிஸ்டம் கிட்டத்தட்ட பெசல்-லெஸ் வடிவமைப்பை வழங்கலாம் என தெரிகிறது. எல்சிடி ஐபோன் தயாரிப்பு தாமதமாவது குறித்து ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகின. 

எனினும் மற்றொரு வல்லுநரான மிங் சி கியோ புதிய ஐபோன் விற்பனை செப்டம்பர் மாதத்திலேயே துவங்கலாம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். விற்பனை தாமதமாகும் நிலையில், இந்த காலாண்டில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் குறைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

புதிய 6.1 இன்ச் ஐபோன் பிளாக், வைட், புளு மற்றும் ஆரஞ்சு என பல்வேறு நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 இன்ச் ஐபோன் மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என்றும், நாட்ச் ரக வடிவமைப்பு வழங்கப்பட்டு, 3D டச் அம்சம் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

விலையை பொருத்த வரை மிங் சி கியோ வெளியிட்டிருக்கும் தகவல்களில் டூயல் சிம் ஐபோன் மாடலின் விலை 650 முதல் 750 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44,616 முதல் ரூ.51,480) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், ஒற்றை சிம் கொண்ட வேரியன்ட் 550 முதல் 650 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37,752 முதல் ரூ.44,616) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Apple #iPhone
Tags:    

Similar News