டெலிகிராம் குறுந்தகவல் செயலியை பயன்படுத்த 72 மணி நேரத்தில் 2.5 கோடி புது பயனர்கள் இன்ஸ்டால் செய்துள்ளனர்.
புதிய டவுன்லோட்களில் அசத்தும் டெலிகிராம்
பதிவு: ஜனவரி 14, 2021 09:15
டெலிகிராம்
வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரத்தால் சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெலிகிராம் செயலியை 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் இன்ஸ்டால் செய்துள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பேவல் டுரோவ் தெரிவித்தார்.
தற்சமயம் டெலிகிராம் செயலியின் மாதாந்திர பயனாளிகள் எண்ணிக்கை 50 கோடி என்றும் அவர் தெரிவித்தார். இது உலகளாவிய எண்ணிக்கை ஆகும். இதில் 38 சதவீத பயனர்கள் ஆசியாவில் இருந்தும், 27 சதவீதம் பேர் ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவில் இருந்து 21 சதவீதம் பேர், மத்திய கிழக்கு மற்றும் 8 சதவீதம் பேர் வட ஆப்ரிக்க பயனர்கள் ஆவர்.
2021, ஜனவரி 6 முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சிக்னல் செயலியை சுமார் 23 லட்சம் இந்தியர்கள் புதிதாக டவுன்லோட் செய்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதே காலக்கட்டத்தில் டெலிகிராம் செயலியை 16 லட்சம் பேர் புதிதாக டவுன்லோட் செய்து இருக்கின்றனர்.
இரு செயலிகள் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கும் நிலையில், வாட்ஸ்அப் செயலியை டவுன்லோட் செய்வோர் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
Related Tags :