ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. #Skullcandy
இந்தியாவில் ஸ்கல்கேண்டி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்
பதிவு: மார்ச் 12, 2019 17:03
ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் புஷ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்களில் ஸ்கல்கேண்டி செக்யூர் ஃபிட்ஃபின் ஜெல்கள் மற்றும் ஆக்டிவ் அசிஸ்டண்ட் வசதியை வழங்கியிருக்கிறது. இது இயர்பட்ஸ்களுக்கு ஆறு மணி நேரத்திற்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும். இத்துடன் கூடுதலாக ஆறு மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் கேஸ் வழங்கப்படுகிறது.
இதன் புதுவித வடிவமைப்பு இயர்பட்ஸ்களை மிக எளிமையாக இயக்க வழி செய்வதோடு சிக்னல்கள் சீராக கிடைக்கவும் துணை புரிகிறது. ஒவ்வொரு இயர்பட்களிலும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனை மூன்று முறை தொடர்ச்சியாக க்ளிக் செய்யும் போது அசிஸ்டண்ட் வசிதயுடன் குறுந்தகவல் அனுப்பலாம்.
இத்துடன் ரிமைண்டர் மற்றும் பல்வேறு வசதிகளை இயக்க முடியும். மேலும் இயர்பட்களை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். தொடர்ச்சியாக இருமுறை இடதுபுற இயர்பட் க்ளிக் செய்தால் இன்கமிங் அழைப்புகளை ரிஜெக்ட் அல்லது ஹோல்டில் வைக்கலாம்.
புதிய வயர்லெஸ் இயர்பட்கள் காதுகளில் இருந்து எளிதில் கீழே விழாதபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக ஆறு மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். இத்துடன் சார்ஜிங் கேஸ் கொண்டு 12 மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும்.
ஸ்கல்கேண்டி புஷ் வயர்லெஸ் இயர்பட் கிரே டே மற்றும் சைகோடிராபிக்கல் டியல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நாடு முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.
Related Tags :