மொபைல்ஸ்

ஸ்மார்ட்போன் விலையை திடீரென குறைத்த விவோ

Published On 2023-06-13 06:33 IST   |   Update On 2023-06-13 06:33:00 IST
  • விவோ நிறுவனத்தின் Y சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்றன.
  • விவோ ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ நிறுவனம் சமீபத்தில் தான் ஏராளமான Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், இவற்றில் விவோ Y35 தவிர வேறு எந்த ஸ்மார்ட்போனும் இதுவரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 90Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரம் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் விவோ Y35 மாடல் விலை தற்போது குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் புதிய விவோ Y35 ஸ்மார்ட்போனினை ரூ. 1500 வரை குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

 

8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் விவோ Y35 மாடலின் விலை ரூ. 18 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது விவோ ஆன்லைன் ஸ்டோரில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1500 குறைக்கப்பட்டு இருக்கிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 16 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

இத்துடன் ஐசிஐசிஐ அல்லது ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

விவோ Y35 அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை விவோ Y35 மாடலில் 6.58 இன்ச் LCD டிஸ்ப்ளே, 1080x2408 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ரேம் திறனை அதிகபட்சம் 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். மெமரியை பொருத்தவரை 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது

Tags:    

Similar News