மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி ஸ்டைலஸ் முழு சிறப்பம்சங்கள்
பதிவு: பிப்ரவரி 04, 2020 10:05
மோட்டோ ஜி ஸ்டைலஸ் ரென்டர்
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8, மோட்டோ ஜி8 பவர் மற்றும் மோட்டோ எட்ஜ் பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி 23-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதே விழாவில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்சமயம் அதன் சிறப்பம்சங்கள் லீக் ஆகி இருக்கிறது. ஸ்டைலஸ் சாதனத்துடன் அறிமுகமாகும் முதல் மோட்டோரோலா ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருக்கிறது.
இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் 6.36 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, இடதுபுற ஓரத்தில் பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அதில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டைலஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: @evleaks
Related Tags :