சென்ஹெய்சர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெட்போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரூ. 14,990 விலையில் புது ஹெட்போன் அறிமுகம் செய்த சென்ஹெய்சர்
பதிவு: ஜனவரி 13, 2022 15:30 IST
சென்ஹெய்சர் ஹெட்போன்
ஜெர்மன் நாட்டு ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான சென்ஹெய்சர் இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கேன்சலிங் ப்ளூடூத் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்தது. ஹெச்.டி. 450 எஸ்.இ. என அழைக்கப்படும் புது ஹெட்போன் விலை ரூ. 14,990 ஆகும்.
இந்த ஹெட்போன் தனித்துவம் மிக்க வயர்லெஸ் ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள பிரீமியம் அம்சங்கள் இசை பிரியர்களுக்கு அலாதியான அனுபவத்தை வழங்கும். ஓவர்-தி-இயர் ரக சென்ஹெய்சர் ஹெச்.டி. 450 எஸ்.இ. ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, ஏ.ஏ.சி. ஆப்ட் எக்ஸ், ஆப்ட் எக்ஸ் லோ லேடென்சி, ஹெச்.எஸ்.பி., ஹெச்.எப்.பி., ஏ.வி.ஆர்.சி.பி. மற்றும் ஏ2டி.பி. கோடெக் கொண்டிருக்கிறது.
பயனர்கள் இந்த ஹெட்போன் அம்சங்களை பிரத்யேக சென்ஹெய்சர் ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப் மூலம் இயக்க முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. செயலி பேட்டரி ஸ்டேட்டஸ், குவிக் ஸ்டார்ட் கைடு, ஃபர்ம்வேர் அப்டேட் என பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது.
ஏ.என்.சி. இயக்கப்பட்ட நிலையில் சென்ஹெய்சர் ஹெச்.டி. 450எஸ்.இ. முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இந்த ஹெட்போனை யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டு சார்ஜ் முழுமையாக செய்ய 2 மணி நேரம் ஆகிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஜனவரி 16 ஆம் தேதி துவங்குகிறது.
Related Tags :