பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299 விலையில் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரூ. 299 விலையில் பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் சலுகை அறிமுகம்
பதிவு: பிப்ரவரி 27, 2021 10:24
பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299, ரூ. 399 மற்றும் ரூ. 555 விலைகளில் புதிய டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று புதிய சலுகைகளும் 10Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவை மார்ச் 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்றன.
டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகள் பிஎஸ்என்எல் பாரத் பைபர் சலுகைகளை விட குறைந்த வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றில் முறையே 100 ஜிபி, 200 ஜிபி மற்றும் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இந்த அளவை கடந்ததும், டேட்டா வேகம் மேலும் குறையும்.
பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. 100 ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதன்பின் பயனர்கள் ரூ. 399 சலுகைக்கு மாற்றப்படுவர். இது அந்தமான் மற்றும் நிகோபார் தவிர அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது.
ரூ. 399 சலுகையில் 200 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதிலும் முந்தைய சலுகையை போன்று நிர்ணயிக்கப்பட்ட 200 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும். ரூ. 555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையில் 500 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது.
மூன்று புதிய சலுகைகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது. ரூ. 299 மற்றும் ரூ. 399 சலுகைகளுக்கு ரூ. 500 பாதுகாப்பு முன்பணம் செலுத்த வேண்டும். ரூ. 299 மற்றும் ரூ. 555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகளை புதிய மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.
Related Tags :