சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் 55 இன்ச் Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரூ. 54,999 விலையில் சியோமி Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்
பதிவு: டிசம்பர் 16, 2020 14:12
சியோமி டிவி
சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து உள்ளது. புதிய 4K டிவி டால்பி விஷன், ஹெச்டிஆர் 10 பிளஸ், ஹைப்ரிட் லாங்-காமா சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக துல்லியமான நிறங்களை பிரதிபலிக்கிறது. இதனால் அதிக திறன் கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், கேமிங் மற்றும் இதர தரவுகளை சீராக ரென்டர் செய்ய முடியும். இதற்கென இந்த டிவியில் MEMC சிப் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் புதிய சியோமி டிவி மிக மெல்லிய பெசல்கள், 96 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் அலுமினியம் அலாய் பிரேம், சேண்ட் பிளாஸ்ட் கோட்டிங் மற்றும் கார்பன் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த டிவி மாடலில் ஆண்ட்ராய்டு 10, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்கேஸ்ட் பில்ட் இன் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இதில் HDMI 2.1 மற்றும் eARC வழங்கப்பட்டு உள்ளது. இது அதிக பேண்ட்வித் ஆடியோ, ஆட்டோமேடிக் லோ லேடென்சி மற்றும் 5ms இன்புட் லேக் கொண்டிருக்கிறது. இதனால் கேமிங் அனுபவம் தலைசிறந்ததாக இருக்கும். இந்த டிவியில் 30 வாட் திறன் கொண்ட 6 ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் சியோமி Mi QLED TV 4K 55 இன்ச் மாடல் விலை ரூ. 54,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது.
Related Tags :