ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் புதிய சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் ஜியோ புதிய சலுகை
பதிவு: செப்டம்பர் 18, 2020 11:01
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 598 விலையில் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
ஐபிஎல் 2020 தொடரை முன்னிட்டு ஏற்கனவே பல சலுகைகளில் ஜியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் ரூ. 598 சலுகை தற்சமயம் இணைந்துள்ளது.
ஜியோ ரூ. 598 சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ அல்லாத எண்களுக்கு 2000 நிமிடங்கள் வாய்ஸ் கால், ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய சலுகை தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 64 கேபியாக குறைக்கப்படுகிறது. இந்த சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது.
Related Tags :