முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன் சுமை குறையும். முன்னேற்றம் கருதி முக்கிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். தொழில் வளர்ச்சியுண்டு.
வசதிகள் அதிகரிக்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பெற்றோர்களின் பிரியம் கூடும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள்.
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர்.
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படலாம்.
புதிய பாதை புலப்படும் நாள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும்.
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் யோகமுண்டு.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை.
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிறர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
செல்வாக்கு மேலோங்கும் நாள். பொருள் வரவு திருப்தி தரும். திருமணத்தடை அகலும். குடும்பத்துடன் ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.