trump 
உலகம்

ஈரான் ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு தொடர்பாக பெருமளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது- டிரம்ப்

அமெரிக்கா- ஈரான் இடையிலான 60 நாள் போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வர இருப்பதால் மீண்டும் தாக்குதலை அமெரிக்கா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் மூண்டது.

போர் இடை நிறுத்தம்

சுமார் 40 நாட்களுக்கு மேலாக நீடித்த போர், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தலையீட்டால் இடைக்காலகமாக நிறுத்தப்பட்டது. 60 நாட்கள் வரை தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்தது. அத்துடன் ஈரான் அணுஆயுதம், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

அணு ஆயுத தயாரிப்புக்கான யுரேனியம் செறிவூட்டலை கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் அதை ஈரான் ஏற்க திட்டவட்டமாக மறுத்துவருவதால் இந்த இழுபறி நீடிக்கிறது. 60 நாள் தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிவுக்கு வரும் சூழலில் மீண்டும் முழு அளவிலான தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

வான்வழியை மூடிய ஈரான்

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரான் வழிக்கு வராவிட்டால், ஈரான் மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார் என்ற தகவல் வெளியானாதால், ஈரான் தனது வான்வழியை மூடியுள்ளது.

கூட்டு நாடுகளுடன் டிரம்ப் பேச்சு

இந்த நிலையில் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் வளைகுடா கூட்டணி நாடுகளான சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான், பஹ்ரைன் நாடுகளுடன் பேசியுள்ளார். அதன்பின் ஈரானுடன் உடனான ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு தொடர்பாக பெருமளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதை இது குறிப்பதாக பார்க்கப்படுகிறது.