தங்கம் விலை கடந்த மாதம் (மே) இறுதி வரை ஏற்ற-இறக்கத்துடன் பயணித்தது. இப்படியாக இருந்த தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து தொடர் சரிவை சந்தித்து வருவதை பார்க்க முடிகிறது.
கடந்த 1-ந்தேதி கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3-ந்தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் 4-ந்தேதிக்கு பிறகு மீண்டும் குறையத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் பெரும் சரிவு இருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 70-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.560-ம், சவரனுக்கு ரூ.4 ஆயிரத்து 480-ம் குறைந்துள்ளது.
தொடர் சரிவுக்கு அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவடைந்தது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வட்டித்தராத தங்கத்தின் மீதான ஈர்ப்பு முதலீட்டாளர்களிடம் குறைந்து போனதே தங்கம் விலை குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
08-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560
07-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
06-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
05-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,440
04-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,840
08-06-2026- ஒரு கிராம் ரூ.270
07-06-2026- ஒரு கிராம் ரூ.270
06-06-2026- ஒரு கிராம் ரூ.280
05-06-2026- ஒரு கிராம் ரூ.280
04-06-2026- ஒரு கிராம் ரூ.285