தமிழக செய்திகள்

அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம்: நான் நடுநிலையோடு இருக்கிறேனா என்பது தீர்ப்பு வழங்கும்போது தெரியும்- ஜே.சி.டி. பிரபாகர்

உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து சட்டசபையில் அறிவிக்கும்போது நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும்.

சென்னை எழும்பூர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அதிமுக விவகாரத்தில் நீங்கள் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா இல்லையா என்பதை நான் தீர்ப்பு வழங்கும்போது இந்த நாடே தெரிந்து கொள்ள போகிறது. குற்றம் சுமத்துகிறவர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.

இரு வேறு குழுக்களாக பிரிந்துள்ள அதிமுகவின் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் மனுக்களை அளித்து உள்ளார்கள். அது என் ஆய்வில் உள்ளது.

உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து சட்டசபையில் அறிவிக்கும்போது நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.