இந்தியா

22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானபோதும் மௌனம் சாதிக்கும் பிரதமர் மோடி - ராகுல் விளாசல்

தராபாத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு ஜூன் 21இல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தர்மேந்திரா பிராதான் ராஜினாமா செய்யக்கோரி ஐதராபாத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதவில், "லட்சக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கியிருக்கும்போதும், 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போதும், பிரதமர் மௌனம் சாதிக்கிறார். அரசாங்கம் பதிலளிப்பதில் கவனம் செலுத்தாமல் தப்பிப்பதில் மும்முரமாக இருக்கிறது.

நீட் தேர்வில் ஏற்பட்டது போன்ற வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து, ஒரு குறைபாடற்ற அமைப்பு நிறுவப்படும் வரை, நாங்கள் ஓய மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.