சினிமா செய்திகள்

கணவர் முன் சமந்தாவுக்கு ஐ லவ் யூ சொன்ன ரசிகர்- பட விழாவில் பரபரப்பு

ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் பூக்களை கொடுத்து ‘ஐ லவ் யூ’ என கூறினார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவையே கலக்கி கொண்டிருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடன் திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல டைரக்டர் ராஜ்நிதிமோருவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சினிமாவில் பிசியாகவே இருந்து வருகிறார். மாஇன்டிபங்காரம் படத்தை தயாரித்த சமந்தா படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது.

விழாவில் சமந்தா, அவரது கணவர் ராஜ்நிதிமோரு ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென மேடை அருகே வந்த ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் பூக்களை கொடுத்து ‘ஐ லவ் யூ’ என கூறினார்.

தனது கணவர் கண் முன்பே தனக்கு ரசிகர் ஐ லவ் யூ சொன்னதை கேட்டு சமந்தா அதிர்ச்சி அடைந்தார். விழா பார்வையாளர்கள் மத்தியிலும் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சமந்தா ரசிகரிடம் பூக்களை பெற்றுக்கொண்டு அவருடன் செல்பி எடுத்து அவரை அனுப்பி வைத்தார். ரசிகரின் செயலை அருகில் இருந்த சமந்தா கணவர் ராஜ் பார்த்து சிரித்து கொண்டே இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் பிரபல நடிகை அதுவும் கணவர் அருகில் இருக்கும் போதே மனைவி சமந்தாவுக்கு ஐ லவ் யூ சொன்ன ரசிகருக்கு எவ்வளவு தைரியம்...?