தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். அப்போது அவர் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:-
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல் சார் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழக அரசு ஒரு ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும், அது எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
திடீரென ஓடிடி சந்தை உருவானது. அதன் வளர்ச்சியும் மிக அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அது திடீரெனச் சரிந்துவிட்டது. இப்போது, திரைப்படத் தொழில் மிகவும் குழப்பமாக இருக்கிறது. வெகு ஆண்டுகளுக்கு முன்பு, திரையரங்கு டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டன. விலை எல்லாம் ரொம்ப ஏறியிருக்கு. எனவே, தயவுசெய்து டிக்கெட் விலைகளை மேலும் உயர்த்துவதை பரிசீலனை பண்ணா நல்லா இருக்கும் என்றார்.