செய்திகள்
பென் ஸ்டோக்ஸ்

2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்

Published On 2019-07-15 11:44 GMT   |   Update On 2019-07-15 11:44 GMT
2016 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இழந்த பெருமையை, தற்போது இந்த உலகக்கோப்பை மூலம் மீட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 155 ரன்கள் சேர்த்தது. பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.

சாமுவேல்ஸின் அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை வீசினார். இங்கிலாந்து 19 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்திவிடும் என்று பலரும் நினைத்தனர்.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் நான்கு பந்துகளிலும் பிராத்வைட் இமாலய சிக்சர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸை எளிதாக வெற்றி பெற வைத்தார்.

பென் ஸ்டோக்ஸ்க்கு இது மிகப்பெரிய அளவில் மோசமான நாளாக அமைந்தது. இங்கிலாந்தின் ஒட்டுமொத்த வெற்றியையும் பென் ஸ்டோக்ஸ் இழக்க வைத்துவிட்டார் என்று விமர்சிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் விமர்சனத்தில் இருந்து மீண்டு வர பல நாட்கள் ஆகின. அதன்பின் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் 84 ரன்கள் குவித்து போட்டி ‘டை’ஆக முக்கிய காரணமாக அமைந்தார். அத்துடன் சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடிக்க துருப்புச் சீட்டாக இருந்தார்.



உலகக்கோப்பையை இங்கிலாந்து 44 ஆண்டுகள் கழித்து கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் 2016-ல் வில்லனாக மாறிய பென் ஸ்டோக்ஸ், நேற்று கதாநாயகனாக மாறினார்.

‘‘2016-ல் இழந்த  பெருமை  இந்த உலகக்கோப்பை வெற்றியின் மூலம் மீட்கப்பட்டது’’ என பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News