உலகம்

பெரு நாட்டில் கொரோனா 5-வது அலை பரவுகிறது

Published On 2022-12-03 03:43 GMT   |   Update On 2022-12-03 03:43 GMT
  • கடந்த செவ்வாய், புதன்கிழமை இடையே மட்டும் 6 ஆயிரத்து 541 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • பெரு நாட்டில் 5-வது அலையில் ஒமைக்ரானின் பிஏ.5 வகையின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது.

லிமா:

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 5-வது அலை பரவி வருகிறது. கடந்த 3 வாரங்களாக அங்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

கடந்த செவ்வாய், புதன்கிழமை இடையே மட்டும் 6 ஆயிரத்து 541 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வரை அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 52 ஆயிரத்து 383 ஆக உள்ளது. தொற்றால் அங்கு 2 லட்சத்து 17 ஆயிரத்து 414 பேர் இறந்தும் உள்ளனர்.

பெரு நாட்டில் 5-வது அலையில் ஒமைக்ரானின் பிஏ.5 வகையின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது.

இந்த தகவல்களை அந்த நாட்டின் சுகாதார மந்திரி கெல்லி போர்ட்டலாட்டினோ தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News