தொடர்புக்கு: 8754422764

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

ஜப்பான் நாட்டில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதிவு: ஜூன் 18, 2019 20:05

ஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 தலிபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப்பகுதியில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு: ஜூன் 18, 2019 16:44

அமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 18, 2019 13:46

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு சிறை

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு நீதி மன்றம் 21 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

பதிவு: ஜூன் 18, 2019 12:33

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 12 பேர் பலி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர், 125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பதிவு: ஜூன் 18, 2019 10:57

உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்

டென்மார்க்கில் உள்ள உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது.

பதிவு: ஜூன் 18, 2019 09:58

20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

ஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. என்ன என்பதை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 18, 2019 09:09

எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம்

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்ட முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பதிவு: ஜூன் 18, 2019 07:44

உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்

தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்து உள்ளனர்.

பதிவு: ஜூன் 18, 2019 07:07

2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள்தொகை 27 கோடி அதிகரிக்கும்

2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 18, 2019 06:29

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர் சுட்டதில் 8 பேரின் உடல்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பதிவு: ஜூன் 18, 2019 05:35

இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்

தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய 2 நாடுகளும் திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கின.

பதிவு: ஜூன் 18, 2019 02:03

பாகிஸ்தானில் வலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை

பாகிஸ்தானில் மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்ட வலைத்தள கட்டுரையாளர் முகமது திலால் கான் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

பதிவு: ஜூன் 18, 2019 01:34

பராகுவே நாட்டில் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல் - 10 பேர் பலி

பராகுவே நாட்டின் சான் பெட்ரோ நகரில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

பதிவு: ஜூன் 18, 2019 00:11

ஈராக் - அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் விமான தாக்குதலில் 16 பயங்கரவாதிகள் பலி

ஈராக் நாட்டின் நினேவே மாகாணத்தில் இன்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பதிவு: ஜூன் 17, 2019 20:43

வடகொரியா அணு குண்டு சோதனையா? - சீன எல்லையில் திடீர் நிலநடுக்கம்

சீனா - வடகொரியா எல்லைப்பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்துக்கான காரணம் வடகொரியாவின்அணு குண்டு பரிசோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பதிவு: ஜூன் 17, 2019 18:48

சவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்

சவுதி அரேபியா நாட்டின் அப்ஹா விமான நிலையம் மீது இன்று தாக்குதல் நடத்தியதாக ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஜூன் 17, 2019 16:30

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி

நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

பதிவு: ஜூன் 17, 2019 15:53

தென்னாப்பிரிக்கா - பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா நாட்டின் லிம்போப்போ மாகாணத்தில் கார் மீது மினி பஸ் மோதிய விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: ஜூன் 17, 2019 15:35

அணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்

உலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுகுண்டுகளை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அப்டேட்: ஜூன் 17, 2019 16:43
பதிவு: ஜூன் 17, 2019 15:31

பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக பாயிஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.

பதிவு: ஜூன் 17, 2019 14:49