உலகம்
சாலையில் விழுந்த மின்கம்பம்

கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் பலி... 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

Published On 2022-05-22 06:29 GMT   |   Update On 2022-05-22 06:29 GMT
கிழக்கு மாகாணங்களில் தாக்கிய புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.
மான்ட்ரியல்:

கனடாவின் கிழக்கு மாகாணங்களான  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. 

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. 
Tags:    

Similar News