உலகம்
இலங்கை போராட்டம் (கோப்பு படம்)

இரண்டு வாரங்களுக்கு பிறகு அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெற்றது இலங்கை

Published On 2022-05-21 10:32 GMT   |   Update On 2022-05-21 10:32 GMT
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர்.

கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. 

இந்த போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். 

இதற்கிடையில் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றார். 

ஆனாலும் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து மேலும் வன்முறை சம்பவங்கள் தொடராமல் இருக்க இலங்கையில் 2வது முறையாக கடந்த மே 6ம் தேதி நாடு தழுவிய அவசர நிலை பிரகனடத்தை  அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருந்தார். 

இரண்டு  வாரங்கள் முடிந்த நிலையில் அவசர நிலை பிரகடனம் இன்று விலக்கிக் கொள்ளப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

சட்டம் ஓழுங்கு நிலை முன்னேற்றம் ஏற்படும் வகையில் 
அவசர நிலை விலக்கிக் கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது


Tags:    

Similar News