உலகம்
கிளிநொச்சியில் இன்று கடை அடைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்- கிளிநொச்சியில் இன்று கடை அடைப்பு

Published On 2022-05-18 11:07 GMT   |   Update On 2022-05-18 11:07 GMT
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று கடைபிடிக்கப்பட்ட நிலையில் போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சில் ஏராளமான குழந்தைகளும் பலியானார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழ் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். போரில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று கடைபிடிக்கப்பட்டது. போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

வடமாகாண சபையில் முன்னாள் உறுப்பினர் துரை ராசா, நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேச சமூகம் ஏற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முழு கடை அடைப்பு போராட்டத்துக்கு கிளிநொச்சி வர்த்தக சபை அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி இன்று கிளிநொச்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News