உலகம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் சாலைக்கு அம்பேத்கர் பெயர்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்

Update: 2022-05-17 14:59 GMT
ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

அங்கு அவர், ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள சாலை ஒன்றிற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சூட்டினார். அதற்கான பெயர் பலகையையும் அவர் திறந்து வைத்தார்.

இதையும் படியுங்கள்.. ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் - விமான பயணிகளை மிரளவைத்த தாய்
Tags:    

Similar News