உலகம்
பாதுகாப்பு படையினர்

எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

Published On 2022-05-08 09:12 GMT   |   Update On 2022-05-08 09:12 GMT
எகிப்தில் நடந்த பயங்கரவாத தாக்கதலில் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிஸ்ஸி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கெய்ரோ:

எகிப்தில் சூயஸ் கால்வாயின் கிழக்கே நீரேற்றும் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. 

இதில் ஒரு அதிகாரி, 10  வீரர்கள் என, பாதுகாப்பு படை தரப்பில் 11 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதலை முறியடித்ததில் 11 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

படை வீரர்களின் மரணத்திற்கு அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிஸ்ஸி இரங்கல் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து போரிடுவதாகவும், பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
Tags:    

Similar News