உலகம்
ரஷியா தாக்குதலில் சேதமடைந்த கட்டிடம்

உக்ரைனின் ஒடிசா மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிறுவன் பலி

Published On 2022-05-03 05:55 GMT   |   Update On 2022-05-03 08:21 GMT
ரஷியா நடத்திய தாக்குதலில் அங்கிருந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்று பயங்கர சேதத்தை சந்தித்தது. அப்போது குடியிருப்புக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர்.
உக்ரைன் ரஷியா இடையே நிலவி வரும் போர் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு நகரங்களில் அதிகளவில் தாக்குதல் நடத்த ரஷியா தனது படைகளை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் கருங்கடல் துறைமுகமான ஒடிசாவில் நேற்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்கிருந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்று பயங்கர சேதத்தை சந்தித்தது. அப்போது குடியிருப்புக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலின் எதிரொலியால் 15 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும், 5 பேர் படுகாயமடைந்ததாகவும் ஒடிசா நகர சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒடிசா நகர சபை டெலிகிராமில், " ஒடிசாவில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலின் எதிரொலியால், சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களின் நிலை குறித்து தகவல் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், பிராந்திய ஆளுநர் மாக்சின் மார்ச்சென்கோ கூறுகையில், " ஒடிசாவின் உள்கட்டமைப்பு வசதிகளின் ஒன்றின் மீது ரஷியா ஏவுகணையை வீசியது. இதில் துரதிருஷ்டவசமாக இறப்பு ஏற்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்- மின்வாரியம் உத்தரவு
Tags:    

Similar News