உலகம்
துப்பாக்கிச்சூடு

ரஷியாவில் துணிகரம் - சிறுவர் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

Update: 2022-04-27 00:57 GMT
ரஷியாவில் சிறுவர் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ:

ரஷியாவின் மத்திய பகுதியில் வெஷ்கெய்மா நகரில் சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் பள்ளிக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளினார்.

இதில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பணியாளர் ஒருவர் என மொத்தம் 3 பேர் பலியாகினர். காயமடைந்த மற்றொரு பணியாளர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இதன்பின், துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னையும் சுட்டுக் கொண்டார். இத்தகவலை முன்னாள் கவர்னர் செர்கெய் மோரோஜோவ் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News