உலகம்
மரியுபோல் எஃகு ஆலை

மரியுபோல் எஃகு ஆலையைச் சுற்றி போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷியா

Published On 2022-04-25 11:57 GMT   |   Update On 2022-04-25 11:57 GMT
மனிதாபிமான வெளியேற்றத்தைத் தொடங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதை காட்டும் வகையில், உக்ரைன் தரப்பு அங்கு வெள்ளைக் கொடிகளை உயர்த்த வேண்டும் என ரஷியா கூறி உள்ளது.
மாஸ்கோ:

மரியுபோல் எஃகு ஆலையைச் சுற்றி போர்நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. அப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய துருப்புக்கள் இன்று முதல் ஒருதலைப்பட்சமாக எந்தவொரு தாக்குதலையும் நடத்தாமல், பாதுகாப்பான தூரத்திற்கு துருப்புகளை திரும்பப் பெற்று, குடிமக்கள் வெளியேறுவதை உறுதி செய்யப்படும் எனறு ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

‘பொதுமக்கள் எந்த திசையில் செல்ல விரும்புகிறார்களோ அங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து மனிதாபிமான வெளியேற்றத்தைத் தொடங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதை காட்டும் வகையில், உக்ரைன் தரப்பு அங்கு வெள்ளைக் கொடிகளை உயர்த்த வேண்டும். ஆலையில் உள்ளவர்களுக்கு ரேடியோ சேனல்கள் வழியாக ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்’ என்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
Tags:    

Similar News