உலகம்
மாணவர்கள் அதிரடி போராட்டம்

இலங்கை பிரதமர் வீடு சுற்றிவளைப்பு: மாணவர்கள் அதிரடி போராட்டம்

Published On 2022-04-25 02:33 GMT   |   Update On 2022-04-25 02:33 GMT
மலை பகுதியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்கள் நேற்று கொழும்புக்கு வந்து காலிமுக பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொழும்பு :

இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 16-வது நாளாக போராட்டம் நீடித்தது. இடைக்கால அரசு அமைக்கும் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்தார்.

இந்தநிலையில், கொழும்பு நகரில் விஜேரமா மவாத்தா பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்சே இல்லத்தை பல்கலைக்கழக மாணவ கூட்டமைப்பு சார்பில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் சுற்றி வளைத்தனர். காம்பவுண்டு சுவர் மீதும் ஏறினர். ‘வீட்டுக்கு போ, ராஜபக்சே’ என்று சுவரில் எழுதினர்.

மலை பகுதியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்கள் நேற்று கொழும்புக்கு வந்து காலிமுக பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போலீசார் கொழும்பு நகரில் பல சாலைகளில் தடுப்புகளை வைத்திருந்தனர். அந்த தடுப்புகளை மனித உரிமை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டனர். போராட்டக்காரர்கள் நுழையக்கூடாது என்பதற்காக கோர்ட்டு உத்தரவின்பேரில் தடுப்பு வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News