உலகம்
ஜோ பைடன்

உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் செல்லும் திட்டம் இல்லை- வெள்ளை மாளிகை தகவல்

Published On 2022-04-18 22:29 GMT   |   Update On 2022-04-19 00:46 GMT
ஜோ பைடனுக்கு பதில் அமெரிக்கா அரசின் உயர் பதவியில் இருப்பவர் உக்ரைன் செல்லக் கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வாஷிங்டன்:

ரஷியாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆதரைவை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு வரவேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில் பைடன் உக்ரைன் செல்லும் எந்த திட்டமும் இல்லை என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கீவ் நகரில் ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ள நிலையில், பைடன் உக்ரைன் பயணம் சிக்கலான பாதுகாப்பு சவால் நிறைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மீண்டும் திறக்கும் நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்ட ஜென்சாகி, பைடனுக்கு பதிலாக அமெரிக்காவின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் உக்ரைன் செல்வார் என கூறினார்.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் யார் எப்போது செல்வார் என்பதை தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News