உலகம்
பாகிஸ்தான் பாராளுமன்றம்

பாகிஸ்தானில் பரபரப்பு - பாராளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் ராஜினாமா

Published On 2022-04-09 19:43 GMT   |   Update On 2022-04-09 19:43 GMT
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் பாராளுமன்றத்தை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

இதற்கிடையே, பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடியது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தாமல் சபாநாயகர் தாமதம் செய்து வந்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். 

Tags:    

Similar News