உலகம்
இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும்- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Update: 2022-04-07 10:10 GMT
12 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மே 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 24-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இலங்கை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனவர்களுக்கு பிணை வழங்க கோரப்பட்டது.

அப்போது, தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் நபர் ஒருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 12 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மே 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும்- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
Tags:    

Similar News