உலகம்
ஜோ பைடன்

எரிபொருட்கள் விலையை குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை

Published On 2022-04-01 02:58 GMT   |   Update On 2022-04-01 02:58 GMT
அமெரிக்கா நாட்டின் கையிருப்புகளில் இருந்து தினமும் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை விடுவிக்க ஜோ பைடன் முடிவு எடுத்து, இது தொடர்பாக உத்தரவிட தயாராகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாஷிங்டன் :

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகச்சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

இந்த நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், எரிவாயு விலையை குறைக்கின்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார்.

அந்த நாட்டின் கையிருப்புகளில் இருந்து தினமும் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அவர் முடிவு எடுத்து, இது தொடர்பாக உத்தரவிட தயாராகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றிய உத்தரவை எந்த நேரத்திலும் ஜோ பைடன் பிறப்பிப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு ஒரு பீப்பாய் 60 டாலருக்கு (சுமார் ரூ.4,500) விற்பனையானது. தற்போது இதன் விலை 105 டாலராக (சுமார் ரூ.7,875) உயர்ந்து உள்ளது.
Tags:    

Similar News