உலகம்
சேதமடைந்த மசூதி

பெஷாவர் மசூதி குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு

Published On 2022-03-05 23:11 GMT   |   Update On 2022-03-05 23:11 GMT
பாகிஸ்தானின் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெஷாவர்:

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 45 பேர் உடல் சிதறி பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

பெஷாவர் குண்டு வெடிப்புக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் மசூதி குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். கோரசான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Tags:    

Similar News