உலகம்
பிரான்ஸ் முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்

பிரான்சில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா

Published On 2022-01-27 03:54 GMT   |   Update On 2022-01-27 03:54 GMT
பிரான்சில் கொரோனா பாதிப்பு 1,73,02,548 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 364 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
பாரீஸ் :

புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானின் தாக்கத்தால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்க்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் பிரான்சில் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

இந்த நிலையில் பிரான்சில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 5,01,635 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1,73,02,548 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 364 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து அங்கு இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,29,489 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News