தாக்குதல் நடத்திய நபர் வெளியே சென்று சிறிது நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.
ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர் தற்கொலை
பதிவு: ஜனவரி 24, 2022 22:56 IST
பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸ்
பெர்லின்:
ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு நபர் திடீரென துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்துள்ளார். ஒரு வகுப்பறையில் புகுந்த அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் மாணவர்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் வெளியே சென்று சிறிது நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார். தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் ஒரு மாணவர் என்று நம்பப்படுகிறது. இந்த தாக்குதலில் அரசியல் அல்லது மத நோக்கங்கள் எதுவும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Related Tags :