அபு தாபியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
டிரோன்களுக்கு அதிரடி தடைவிதித்தது ஐக்கிய அரபு அமீரகம்
பதிவு: ஜனவரி 23, 2022 16:18 IST
டிரோன்களுக்கு தடை
ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபு தாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஒருமாதம் ஆளில்லா விமானங்களை பறக்க ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. டிரோன் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலகு ரக விளையாட்டு விமானங்களையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வேலைக்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தேவைக்கான விதிவிலக்கு மற்றும் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
சவுதி தலைமையிலான ராணுவ கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் இடம் பிடித்துள்ளது. ஏமன் உள்நாட்டு சண்டையில் சவுதி கூட்டுப்படை ஏமன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தும் ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் முதன்முறையாக அபு தாபி எல்லைக்குள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு வருடங்களாக இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கச்சாய் எண்ணெய் சேமித்து வைக்கும் கிடங்கு அருகே எண்ணெய் டேங்கர் வெடித்தன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
Related Tags :