உலகம்
கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்தும் போலந்து உணவகங்கள்

உணவு வேண்டுமா? முதலில் தடுப்பூசி போடுங்கள் - கட்டுப்பாடு விதிக்கும் போலந்து உணவகங்கள்

Published On 2022-01-20 23:53 GMT   |   Update On 2022-01-20 23:53 GMT
போலந்தில் சுமார் 56 சதவிதம் பேர்களே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றிய அளவில் சராசரியை விட மிகக் குறைவாக கருதப்படுகிறது.
வார்சா: 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 ஐத் தாண்டியுள்ளது.    தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில் போலாந்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்காதது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதனால் கொரோனா தொற்று  தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் போலந்து மருத்துவக் கவுன்சிலின் 17 உறுப்பினர்களில் 13 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

போலந்தில் சுமார் 56 சதவிதம் பேர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இது ஐரோப்பிய ஒன்றிய அளவில் சராசரியை விட மிகக் குறைவாக கருதப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசி போட்டுள்ள வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிப்பதன் மூலம் தனது ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை வார்சா நகர உணவங்கள் மேற்கொண்டுள்ளன. இது மிகவும் முக்கிய முடிவு என்றும் எதிர்ப்புகள் எழுந்தாலும்  வழக்கமான வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டதாக உணவு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பிற இடங்களில் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மருத்துவக்குழு ஆலோசகரான பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News